இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பழங்குடியின மக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் தங்களது குழந்தைகளுடன் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மூர்த்தி நகர், ஓதியம்பட்டு பகுதியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் இலவச மனை பட்டா வழங்க கோரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்களிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமலும், இலவச மனைபட்டா வழங்காததை கண்டித்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day