விழுப்புரத்தில் கனமழையால் சேதமடைந்த தரைப்பாலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் சேதமடைந்தால் கிராம மக்கள் அவதியுற்றனர். 

கோவில்புறையூரில் இருந்து கிளாக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் ஏரி ஓடை வாய்க்காலுக்கு குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தின்போது  சேதமடைந்தது. இதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் பருவமழையால் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து கோவில்புறையூர் - கிளாக்குப்பம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்படுள்ளது. 

varient
Night
Day