சென்னையில் ஆபரண தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3000 குறைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து 88 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகல் மேலும் ஆயிரத்து 800 ரூபாய் குறைந்தது. இதன்மூலம் ஒரே நாளில் அதிரடியாக சரவனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து 88 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 375 ரூபாய் சரிந்து, 11 ஆயிரத்து 75 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு ஜெட் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருவது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day