குஜராத்தில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் மற்றும் மாயமானவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

வதோதரா மாவட்டத்தையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் பத்ரா வட்டம் முஜ்பூர் என்ற இடத்தில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கடந்த 1985-ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. போக்குவரத்து மிகுந்த இந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். மேலும் பாலம் இரண்டாக உடைந்து துண்டானதால் ட்ரக் வாகனம் ஒன்று அந்தரத்தில் தொடங்கிடயது. இந்த கோர சம்பவத்தால் நிகழ்விடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பலர் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களை தொடர்ந்து தேடி வரும் நிலையில் மேலும் ஆறுபேர் சடலங்களாக மீட்கப்பட்டதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் மற்றும் மாயமானவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பால உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், கம்பிரா பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாக  தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாலம் இடிந்தது தொடர்பாக உடனடியாக விசாரணையைத் தொடங்கவும் சாலை கட்டுமானத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day