17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இன்று பொது வேலைநிறுத்த போராட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் பொதுவேலைநிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளன.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள், அஞ்சல் சேவைகள், மற்றும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் போன்றவை இயங்கவில்லை. பொதுப் போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத் போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் இணைப்பு குழுக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி மற்றும் பல முக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. மேலும்  பல்வேறு மாநில தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day