அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசில் நாட்டில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரேசிலியா நகரில் உள்ள அல்வோராடா மாளிகைக்குச் சென்றார். அப்போது, பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தார். இதையடுத்து பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சவுதன் கிராஸ் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த விருதானது தனக்கு மட்டுமல்ல 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Night
Day