எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு - அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதி அளித்த ரஷ்யா

எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. 

இந்திய ராணுவம் 2018ம் ஆண்டில், ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது. இதுவரை ரஷ்யா 3 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. உக்ரைன் போர் நடந்து வருவதால் ரஷ்யாவால் எஞ்சிய வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்க முடியவில்லை. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முக்கிய பங்கு வகித்த S-400 வான் ஏவுகணை அமைப்புகளில் மீதமுள்ள இரண்டை 2027ம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு வழங்குவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது. சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும், ரஷ்ய பிரதிநிதி ஆண்ட்ரி பெலோசோவுக்கும் இடையிலான சந்திப்பின்போது இந்த உறுதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day