ஈரான் 400 கிலோ யுரேனியம் மாயம் - 10 அணு குண்டுகளை உருவாக்க முடியும் - ஜே.டி.வான்ஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரானிடம் இருந்து 400 கிலோ யுரேனியம் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் 400 கிலோ யுரேனியம் 10 அணுகுண்டுகளை தயாரிக்க போதுமானது என்று அமெரிக்கா துணை அதிபர் ஜேடி வான்ஸ் எச்சரித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு யுரேனியம் கையிருப்பையும், சில உபகரணங்களையும் ஒரு ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. எங்கு கொண்டு செல்லப்பட்டது என்று தெரியாத சூழலில் பூமிக்கடியில் உள்ள வேறொரு சேமிப்பு மையத்திற்கு ஈரான் கொண்டு சென்றிருக்கக் கூடும் என்று நம்புவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.

Night
Day