இந்து முன்னணி பிரமுகர் கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம், குமாரானந்தபுரத்தில் இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குமாரானந்தபுரம் காமராஜர் பகுதியை சேர்ந்தவர் இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன். நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில், காமராஜர் வீதியில் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன்  பாலமுருகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அதில், அதிகாலை சுமார் 4 மணிக்கு மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பாலமுருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day