10வது படிக்கும் மாணவி மீது ஒரு தலை காதல் - கொலை முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் ஒருதலை காதல் விவகாரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அருகே வசித்து வரும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியின் கழுத்தில் ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ஆபத்தான முறையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை கொலை செய்ய முயன்றது யார், எதற்காக கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பதும், ஒருதலை காதல் விவகாரத்தில் ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Night
Day