வன்கொடுமை வழக்கு: காவலர்கள் 2 பேர் பணிநீக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இரண்டு காவலர்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண், தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ஏந்தல் புறவழிச்சாலை கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட காவலர்கள் இருவரும் முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சிறையில் உள்ள காவலர்கள் இருவரையும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Night
Day