2வது திருமணம் செய்ய முயலும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டாவது திருமணம் செய்ய முயலும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகணேஷ் என்பவர், தனது பெற்றோருக்கு தெரியாமல் சவுதி அரேபியாவில் பேராசிரியராக பணியாற்றி வரும் தஞ்சாவூர் சேர்ந்த விதவைப் பெண் கலைசெல்வியை திருமணம் செய்துள்ளார். சில நாட்கள் பெற்றோருடனும், கலைச்செல்வியுடனும் அங்கும் இங்குமாக தங்கி இல்லற வாழ்க்கையை நடத்தி வந்த விஜயகணேஷ், திடீரென தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து குடியாத்தம் போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கலைச்செல்வி குற்றம் சாட்டியுள்ளார். கணவர் 2வது திருமணம் செய்வதற்காக தலைமறைவாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வலியுறுத்தி கலைச்செல்வி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

varient
Night
Day