உலக செஸ் - தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தங்க பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக செஸ் வீராங்கனை ஷர்வானிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ‎


உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்றது. இந்ததொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனை ஷர்வானிகாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ‎தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செஸ் போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். தொடர்ந்து செஸ் விளையாட்டில் இன்னும் தான் மேலே செல்ல வேண்டும் என்றும் அது தான் தன்னுடைய ஆசை என்று கூறிய அவர், முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின்பு தவறை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.

Night
Day