ஆசாத் காஷ்மீர் என பாக்., வர்ணனையாளர் கூறியதால் சர்ச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீராங்கனை சானாமீருக்கு இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

நேற்று நடந்த பாகிஸ்தான்- வங்கதேசம் இடையேயான போட்டியின் போது, பாகிஸ்தான் வீராங்கனை நட்டாலியா பெர்வைஸ் காஷ்மீரில் இருந்து வந்தவர் என கூறிய சானாமீர், உடனடியாக ஆசாத் காஷ்மீர் என கூறினார். இந்தியா அந்த பகுதியை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கும்நிலையில், சானாமீர் ஆசாத், காஷ்மீர் என கூறியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள சானாமீர், குறிப்பிட்ட பகுதியில் இருந்து வந்த நட்டாலியா, அவர் எதிர்கொண்ட சவால்களை எடுத்துக்காட்டுவதற்காக மட்டுமே இவ்வாறு கூறியதாகவும், அதை அரசியலாக்காதீர்கள் எனவும் கோரி உள்ளார். 

Night
Day