நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இதுகுறித்து திரிஷா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டை முழுவதுமாக சோதனையிட்டனர். வீட்டில் திரிஷா இல்லாத நிலையில் அவரது பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதும் சோதனையில் தெரியவந்தது.

Night
Day