ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து - அடுத்த மாதம் தீர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.  கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர். கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்தநிலையில் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

Night
Day