விக்ரவாண்டியில் கார் தீப்பிடித்து எரிந்து 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் மூணாறுக்கு சுற்றுலா சென்ற 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த சம்சுதீன், ரிஷி, மோகன், அப்துல் அஜிஸ், தீபக் ஆகிய 5பேரும் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். விக்கிரவாண்டி அருகே வந்த போது, தூக்க கலக்கத்தில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியன் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் சிக்கி காரில் பயணம் செய்த சம்சுதீன், ரிஷி மற்றும் மோகன் ஆகிய 3பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், அப்துல் அஜிஸ், தீபக் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

Night
Day