மகாத்மாவின் 156வது பிறந்தநாள்- பிரதமர் மோடி மரியாதை

எழுத்தின் அளவு: அ+ அ-

காந்தி ஜெயந்தியையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அரசு விழாவாக கடைபிடித்து முதலமைச்சர்களும், ஆளுநர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனிடையே காந்தி ஜெயந்தியையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை குடியரசு தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Night
Day