ஆலயங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம், முகூர்த்தகால் நடும் விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆலயங்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம், முகூர்த்தகால் நடும் விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சுண்ணாம்புகார தெருவில் உள்ள மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து மஹா மாரியம்மன் கோபுர கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் வேகுபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏன மாரியம்மன் உடனாய ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை சிவசக்தி விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசம் புறப்பட்டு கோவில் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் மறைஞாயநல்லூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வராகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புனித நீர் சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்டு ஆலய விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஸ்ரீ மங்களாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றி  மங்கள வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷே தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி திருவிழாவிற்கான அழைப்பிதழ் வாசிக்கப்பட்டது.

Night
Day