திருச்செந்தூர் கோவில் - குடமுழுக்கு நாளில் புனித நீர் தெளிப்பதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக ட்ரோன் சோதனை ஓட்டம் மாவட்ட எஸ்பி முன்னிலையில் நடைபெற்றது.

முருகனின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஜூலை 7 ஆம் தேதி குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற உள்ளது. கடற்கரை பகுதியில் பக்தர்களை ஒரே இடத்தில் அமர வைத்து குடமுழுக்கு விழாவை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக 20 இடங்களில் பெரிய ட்ரோன்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதன் சோதனை ஓட்டம் கடற்கரை பகுதியில் மாவட்ட எஸ்.பி முன்னிலையில் நடைபெற்றது.

Night
Day