துபாய் பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025 - நடிகர் ஆர்யா குத்துவிளக்கேற்றி துவக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலகம் முழுவதும் எங்கு இடம் வாங்கினாலும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து வாங்க வேண்டும் என நடிகர் ஆர்யா அறிவுறுத்தினார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் எஸ்.ஆர்.எம் இன்டர்நேஷனல் ரியல் எஸ்டேட் சார்பில் துபாய் பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025 துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகம் முழுவதும் எங்கு இடம் வாங்கினாலும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், திருப்புவனம் அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அதனை தவிர்க்குமாறு நடிகர் ஆர்யா கூறி நழுவினார். 

Night
Day