எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோலிலின் குடமுழுக்கு விழாவுக்காக கடந்த 1ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி தொடர்ந்து விமர்சையாக நடைபெற்று வந்தன. இன்று அதிகாலையில் 12வது யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து பெறப்பட்ட புனித நீரானது, கோவிலின் ராஜகோபுரம் மீது ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. அப்போது சண்முகர் ஜெயந்திநாதர், மூலவர் நடராஜர் குமரவிடங்க பெருமாள் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு நன்னீர்கள் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்வுகளை அங்கு, திரண்டிருந்த பக்தர்கள், அரோகரா அரோகரா கோஷம் முழங்க கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்வுக்கு பின்பு காலை 9 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை செய்து சண்முகர் விலாசம் சேர்தலுடன், சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு சண்முருக்கு தங்க திருவிழாபரணம் அணிவித்து அலங்காரம் செய்து தீபவழிபாட்டுக்கு பின், பரிவாரமூர்த்திகளுடன் வீதி உலாவும் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் திருச்செந்தூர் கடலில் புனிதநீராடி முருகனை வழிபட்டனர்.