தமிழக - கேரளா எல்லையில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள போக்குவரத்துத்துறை அபராதம் விதித்தது, தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்ததன் காரணமாக வாளையார் சோதனை சாவடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் சபரிமலைக்கு செல்வார்கள் என்பதால் அந்த நாட்களில் கூடுதலாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று திடீரென தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகளை கேரள போக்குவரத்து துறையினர் திடீரென சிறை பிடித்து 70 லட்சம் லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரள போக்குவரத்து துறையின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் நேற்று இரவு 8 மணி முதல் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் சேவைகளை நிறுத்துவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்தநிலையில், கேரள போக்குவரத்து துறையை கண்டித்து, தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் 15க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், அவதியடைந்த பயணிகள், பேருந்து
ஓட்டுனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day