காற்றாலை இறக்கை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிரா சென்ற அந்த கன்டெய்னர் லாரி, மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அம்மையநாயக்கனூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் சிறிய காயங்களுடன் தப்பிய நிலையில், இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலையில் தூத்துக்குடிக்கு காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரிக்கு பாதுகாப்பாக சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்ற சொகுசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்களால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Night
Day