'பீகாருக்கு 'start up' தேவையே தவிர, 'Hands up' அல்ல...' - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியில் பீகாரில் வீழ்ச்சியின் சகாப்தம் தொடங்கியது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகாரில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலை தொடர்ந்து, வரும் 11ம் தேதி 2ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சீதாமர்ஹியில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பீகாரின் அனைத்து வளர்ச்சியையும் ஆர்ஜேடி முடிவுக்கு கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினார். வளர்ச்சி தொடர்பாக அவர்களிடம் இருந்து வரும் எந்த பேச்சும் பச்சை பொய் என்று விமர்சித்த பிரதமர் மோடி, ஆர்ஜேடி ஆட்சியில் பீகாரில் வீழ்ச்சியின் சகாப்தம் தொடங்கியது என்றும் அவர்கள் மோசமான நிர்வாகத்தை விரும்புவதாகவும் சாடினார். 
 
தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி, குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைப்பதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, பீகார் குழந்தைகளுக்காக ஆர்ஜேடி என்ன செய்ய விரும்புகிறது என்பது அவர்களின் தேர்தல் பிரசாரத்தில் தெளிவாகத் தெரிவதாக கூறினார். நம் குழந்தைகளை மிரட்டி பணம் பறிப்பவர்களாக மாற்ற விரும்புபவர்களை வெற்றி பெற அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பீகார் மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்பியுள்ளதாக பாராட்டிய பிரதமர் மோடி, தற்போது ​​முதலீட்டாளர்கள் பீகாருக்கு வர ஆர்வம் காட்டுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

பீகாரில் துப்பாக்கியுடன் வந்து 'Hands up' என சொல்லும் காலம் மலையேறிவிட்டதாக குறிப்பிட்ட பிரதமர், பீகாருக்கு 'start up' தேவையே தவிர 'Hands up' அல்ல என அடுக்குமொழியில் பேசினார்.

Night
Day