டிச.1 ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி துவங்குகிறது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், நாடளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி துவங்கி 19ம் தேதி வரை நடைபெறும் என்று கூறியுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான அரசின் முன்மொழிவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள கூட்டத்தொடரை எதிர்நோக்குவதாக கிரண் ரிஜிஜு பதிவிட்டுள்ளார். இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day