விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

புதூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது நண்பருடன் காரில் பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் செலகரச்சல் பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்திற்குள் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் காரில் சிக்கியிருந்த இருவரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.  சாலையில் போதிய வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் பராமரிப்பு இல்லாதது இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று அப்பகுதிகள் குற்றச்சாட்டினர்.

Night
Day