கரூரில் கடையை அடித்து நொறுக்கிய தாய், மகள் - வீடியோ வைரல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அடித்து நொறுக்கிய தாய், மகளால் பரபரப்பு நிலவியது.

குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் கடம்பவனேஸ்வரர் கோயில் மேற்கு பகுதியில் வாடகை கட்டடத்தில், பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இதற்கிடையில், இவரது கடைக்கு எதிர்க்கடைக்காரரான லட்சுமி என்பவர் தனது மகளுடன் சேர்ந்து சரவணன் கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடை நடத்துவதில் போட்டி ஏற்பட்டதால் அடித்து நொறுக்கியதாக தெரிய வந்துள்ளது. 

Night
Day