எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி அலட்சியமாக பொறுப்பற்ற விதத்தில் பேசியதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இளம்பெண் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவரிடம் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, திருச்செந்தூர் கோயிலில் இருந்து வெளியே வந்த திமுக எம்.பி. கனிமொழியிடம், தனது உடமைகள் திருடப்பட்டது தொடர்பாக வேதனையை தெரிவித்தார். அதற்கு திமுக எம்.பி. கனிமொழி, கோயிலுக்கு நீங்கள் மட்டும் வரவில்லை, இன்னும் நிறைய பேர் வந்திருப்பதாக அலட்சியமாக அந்த பெண்ணிடம் கூறியது அங்கு நின்று கொண்டிருந்த பொது மக்களை முகம் சுழிக்க வைத்தது. முருகன் கோயிலுக்கு வந்து, உடைமைகளை தொலைத்து விட்டு நடுரோட்டில் நின்ற பெண்ணிடம் திமுக எம்பி கனிமொழி இதுபோன்று பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.