கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த லாடனேந்தல் கிராமத்தில் உள்ள  விநாயகர், வீரமாகாளி அம்மன், அய்யனார், காமாட்சி அம்மன் முத்தையா சுவாமி, ஊர்காவலன், முனியாண்டி உள்ளிட்ட 7 கோவில்களில் மகா கும்பாபிஷேகம் விழா  நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர், மாகாளியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு திருவிழா நடைபெற்றது. முன்னதாக வேள்வி வழிபாடுகளோடு தீர்த்த கலசங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சக்தி விநாயகர் மற்றும் மாகாளியம்மனின் மூலவர் சிலைகளுக்கு அலங்கார பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. 

திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவில் 21ம் ஆண்டு திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு பால்குடம், அக்னி சட்டி மற்றும் அலகு குத்தி வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த கொடிமங்கலம் கிராமத்திலுள்ல வள்ளி தேவசேனா சமேத குமார சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பாலாலய விழா நடைபெற்றது. இதற்காக கோவிலை சுற்றிலும் கலசங்கள் எடுத்து வரப்பட்டு மூலவர் விமானம் மற்றும் மயூர விமான பாலாலயம் நடைபெற்றது. 

வேலூர் அரச மரப்பேட்டை பகுதியில் உள்ள சித்தி புத்தி சமேத வல்லப விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு வேதங்கள் முழங்க கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. 

Night
Day