கன்னியாகுமரி: காருடன் சேர்த்து டூவீலரை இழுத்துச் சென்ற காட்சி - டூவீலர் தீப்பிடித்து மாணவன் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காரில் சென்ற குடிபோதை நபர், இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவனை 3 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

சுசீந்திரம் அருகே தெற்கு பால்கிணற்றான் விளையைச் சேர்ந்த கோபி, நேற்று மாலை குடிபோதையில் காரை ஒட்டி வந்துள்ளார்.  அப்போது, சங்குதுறை கடற்கரை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தெற்கு சூரங்குடியை சேர்ந்த அஜய் என்ற மாணவர் மீது காரை மோதி சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் சென்றுள்ளார். இதனால் இருசக்கர வாகனம் தீப்பிடித்து மாணவன் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், சுசீந்திரம் போலீசார் கோபியை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மாணவனை இருசக்கர வாகனத்துடன் காரில் இழுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. 

Night
Day