எல்லை நாடுகளை ரஷ்யா தனதாக்க நினைக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யா தனது எல்லை நாடுகளை, காலனி நாடுகளாக்க முயற்சிப்பதாக எஸ்டோனியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கஸ் திசக்னா கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற ரைசினா மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், இதுவரை எல்லையோர நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் குழந்தைகளை, ரஷ்யா நாடு கடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். 2008 ஆம் ஆண்டு, ஜியார்ஜியாவில் தொடங்கிய இந்த கடத்தல் 2014ஆம் ஆண்டு உக்ரைனில் நடந்ததாகவும், போலந்து, பின்லாந்த் போன்ற எல்லையோர நாடுகளை, ரஷ்யா தனதாக்க முயற்சிப்பதாகவும் மார்கஸ் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், போர் எண்ணம் கொண்ட புதினை நிறுத்த முடியாது, எனவே, ஐரோப்பா நாடுகள் உக்ரைனுக்கு துணை நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Night
Day