ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக உத்தரபிரதேசம், அசாம், உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கர் அரசுகள் வெளியிட்ட அறிவிப்பாணையில் வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் அன்று தங்கள் மாநிலங்களில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தன. தற்போது வரும் 22-ம் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீராம் லல்லா விரஜ்மான் பிரதிஷ்டையை முன்னிட்டு ராஜஸ்தானில் அன்று மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Night
Day