இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் இருவேறு இடங்களில் குளிர்காய மூட்டிய நெருப்பில் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் அடர்பனியுடன் கூடிய கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல இடங்களில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லிக்குட்பட்ட கெடா கலான் கிராமத்தில் வீடு ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 4 பேர் நெருப்பில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். அவர்கள் லாரி ஓட்டுநரான ராகேஷ் திங்கர், அவரது மனைவி லலிதா தேவி மற்றும் அவர்களின் 8 மற்றும் 7 வயதுக் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோல் இந்திராபுரி பகுதியில் நெருப்பு மூட்டி உறங்கிக் கொண்டிருந்த அபிஷேக் மற்றும் ராம் பகதூர் என்ற இரு இளைஞர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...