டெல்லியில் காற்று மாசு... நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 
 
டெல்லி முழுவதும் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடித்து வருகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், BS6 தரநிலை இல்லாத சுமார் 12 லட்சம் வெளிமாநில வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முறையான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக அனைத்து உணவகங்களும்  விறகுகளைப் பயன்படுத்தி இயங்கும் அடுப்புகளைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் உடனடியாக மின்சாரம் அல்லது எரிவாயு அடுப்புகளுக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

டெல்லி அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருவதாகவும், உத்தரவை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே டெல்லி காற்று மாசு விவகாரத்தில் அரசு இயந்திரங்கள் முழுமையாக தோல்வியடைந்து உள்ளதாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் பலனிக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, இந்த பிரச்னையில் தற்காலிக தீர்வை தேடுவதற்கு பதிலாக, நீண்ட கால திட்டமிடல்தான் அவசியம் என அறிவுறுத்தியது. மேலும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் டெல்லி அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.    

Night
Day