உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு தீர்வு காணப்படாமல் சட்டத்தை செயல்படுத்த முடியாது - டி.ராஜா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு தீர்வு காணப்படாமல் சட்டத்தை செயல்படுத்த முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வக்பு திருத்தச் சட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது என்றும், அவற்றுக்கு நாடாளுமன்றம் தீர்வு காண வேண்டும் என கூறினார். உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு தீர்வு காணப்படாமல் மத்திய அரசால் வக்பு திருத்த சட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் டி.ராஜா கூறினார். 

Night
Day