வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வருமான வரி  கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால்  அதற்கான   படிவத்தில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்றைக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி  தாமதமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள்   5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் வதந்தி என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Night
Day