அஇஅதிமுக ஒன்றிணைய அண்ணா பிறந்தநாளில் சபதம் ஏற்போம்' - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக ஒன்றிணையவேண்டும் என பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித் தலைவியின் நல்லாட்சி மலர வேண்டும் என்றால் பிரிந்து இருக்கக்கூடிய கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Night
Day