புதிதாக 10,650 எம்பிபிஎஸ் சீட்களுக்கு தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிதாக 10 ஆயிரத்து 650 எம்.பி.பி.எஸ். சீட்களுக்கு தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக 41 மருத்துவக் கல்லுாரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை 816ஆக உயர்ந்துள்ளது. கடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 75 ஆயிரம் இடங்கள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மருத்துவ துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

Night
Day