சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பாக குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்களை காண்பதற்காக இல்லத்திலிருந்து வெளியேவந்த ரஜினிகாந்த், கை அசத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். அத்துடன் இனிப்புகளையும் வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், எல்லோரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்க இறைவனை பிரார்த்திப்பதாக கூறி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

 

Night
Day