நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் எனவும், இருளின் மீது ஒளியும், அறியாமையின் மீது அறிவும், தீமையின் மீது நன்மையும் வெற்றி பெற்றதைக் குறிப்பதே தீபாவளி என்றுள்ளார். அனைவரும் தீபாவளியை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் கொண்டாடுமாறு வலியுறுத்திய குடியரசுத் தலைவர், இந்த தீபாவளி அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைத் தரட்டும் என வாழ்த்தி உள்ளார்.

Night
Day