எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற பிரம்மாண்ட தீபோற்சவ நிகழ்ச்சி மூலம் இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. லேசர் ஷோ, ட்ரோன் ஷோ, கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்திக்கு ராமர் திரும்பியதை கொண்டாடும் விதமாக சரயு நதிக்கரையில் சுமார் 10 ஆயிரம் தன்னார்வலர்களால் 26 லட்சத்து 17 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. இதன்மூலம், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் விளக்குகளைக் காட்சிப்படுத்திய நகரம் என்ற சாதனையை அயோத்தி பெற்றுள்ளது. இதேபோல், ஆயிரக்கணக்கான மக்கள், ஒரே நேரத்தில் ஆரத்தி சுழற்சி செய்து மற்றொரு உலக சாதனையையும் நிகழ்த்தி உள்ளனர்.
தொடர்ந்து பார்வையாளர்களை அசத்தும் வகையில் பிரம்மாண்ட லேசர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, ராமர், அனுமன், வில் அம்பு போன்ற பல வடிவில் தோன்றிய ட்ரோன் ஷோ நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
கடைசியாக சரயு நதிக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட வான வேடிக்கை நிகழ்ச்சியை பார்வையாளர்கள் மெய் மறந்து ரசித்தனர்.