தீபாவளி கொண்டாடிய பாதுகாப்பு படை வீரர்கள்..

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ள BSF வீரர்கள் பட்டாசுகளை வெடித்து, விளக்குகள் மற்றும் சங்கு சக்கரங்களை ஏற்றியும் தீபாவளியை பண்டிகையை கோலகலமாக கொண்டாடி நண்பர்களுக்கு வாழ்த்துகளை பரிமாற்றிக்கொண்டனர்.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது. அதன் ஒருபகுதியாக செனாப் நதியில் அமைந்துள்ள அக்னூர் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் விளக்குகளை ஏற்றியும் இனிப்புகளைப் பகிர்ந்தும் தீபாவளியை கொண்டாடி வாழ்த்துகளை பரிமாற்றிக்கொண்டனர்.

சண்டிகரில் எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். ராணுவ வீரர்கள் புத்தாடை அணிந்து பூஜை செய்து விளக்குகளை ஏற்றியும் ஒருவருகெருவர் இனிப்புகளைப் பகிர்ந்தும் தீபாவளியை பண்டிகையை \கோலகலமாக கொண்டாடினர்.

இதேபோன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி வாகா எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் தீபாவளி பண்டிகையை கோலகமாக கொண்டாடினர். இது குறித்து பேசிய ராணுவ வீரர்கள், நாங்கள் தங்கள் குடும்பத்திலிருந்து விலகி இருக்கும் நிலையில், ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும் நாட்டு மக்களின் அமைதிக்காக எல்லையில் தங்கள் தீபாவளியைக் கொண்டாடுவதாகவும் அவர்கள்  கூறினர்.


Night
Day