கடற்படை வீரர்களுடன் பிரதமர் தீபாவளி கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.என்.எஸ். விக்ராந்தின் பெயர் பாகிஸ்தானுக்குள் பயத்தை ஏற்படுத்தியதை சில மாதங்களுக்கே முன்பே கண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோவா கடற்கரையில் உள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்தில் கடற்படை வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது, வீரர்களுக்கு தனது கரங்களால் இனிப்புகளை ஊட்டி பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தீபங்களின் பண்டிகையை கடற்படை வீரர்களுடன் கொண்டாடியதால் தான் பாக்கியசாலியாக உணர்வதாக தெரிவித்தார். முடிவில்லா வானத்தை போல முடிவில்லா ஆற்றலை ஐ.என்.எஸ். விக்ராந்த் உள்ளடக்கி உள்ளதாகவும், ஐ.என்.எஸ். விக்ராந்தை பெற்றபோது, நமது இந்திய கடற்படை காலனித்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டது என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். ஐ.என்.எஸ். விக்ராந்தின் பெயர் பாகிஸ்தானுக்குள் பயத்தை ஏற்படுத்தியதை சில மாதங்களுக்கு முன்பு கண்டதாக கூறிய பிரதமர் மோடி, சண்டைக்கு முன்பே எதிரியின் தைரியத்தை நொறுக்கும் சக்தி விக்ராந்திடம் உள்ளதாக தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில், நமது ஆயுதப் படைகள் தற்சார்பை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்திருப்பதில் தான் பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதனிடையே ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இருந்தவாறு, இந்திய கடற்படை வீரர்களின் வான் சாகச நிகழ்ச்சியை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். மேலும், பிரதமர் மோடிக்கு பாடல் பாடி கடற்படை வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

Night
Day