நாட்டில் வறுமையை ஒழித்த முதல் மாநிலம் கேரளா - முதலமைச்சர் பினராயி விஜயன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டில் வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு இன்று கூட்டப்பட்ட கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய பினராயி விஜயன், கேரளாவை தீவிர வறுமை இல்லாத முதல் மாநிலமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். நவ கேரளாவை உருவாக்குவதில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் தருணத்தில் சட்டமன்றம் தற்போது கூடியிருப்பதாக குறிப்பிட்ட பினராயி விஜயன், கேரளாவில் புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று தீவிர வறுமை ஒழிப்பு என்று கூறினார்.  அனைவருக்கும் ஒரே மாதிரியான கொள்கைக்கு பதிலாக, 64,006 பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் கண்டறிந்து,  ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட திட்டங்களை உருவாக்கியதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.

Night
Day