பிரதமர் மோடியை அவமதிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளது - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியை அவமதிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். 

பீகார் தேர்தலையொட்டி, லக்கிசராயில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தி நேற்று பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பேசியதாக கூறினார். அவர் பிரதமரை மட்டுமல்ல, சூரிய கடவுளையும் இழிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அமித் ஷா, சூரிய கடவுளின் முக்கியத்துவத்தையும், நம்பிக்கையையும் ராகுல் காந்தியும் அவருடைய தாயாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று கூறினார். வரலாற்றை திரும்பிப் பார்த்தால், காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பும் போதெல்லாம் அந்த கட்சி துடைத்தெறியப்பட்டுள்ளது என்று கூறிய அமித் ஷா, இந்த முறையும் நவம்பர் 14ம் தேதி வாக்குப் பெட்டிகள் திறக்கப்படும் போது, இந்தியா கூட்டணி முழுவதுமாக துடைத்தெறியப்படும் என்று கூறினார்.

Night
Day