பழக்கடையின் ஷட்டரை திறக்க முயன்ற இளைஞர் - போலீஸ் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலூர் அருகே, பட்டப்பகலில் பழக்கடையின் ஷட்டரை திறக்க முயன்ற இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. காட்பாடியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, கடையின் ஷட்டரை யாரோ திறக்க முயன்றது போல் தென்பட்டுள்ளது. இதனையடுத்து, கடையின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது இளைஞர் ஒருவர் கடையின் ஷட்டரை திறக்க முயன்றது தெரிய வந்தது. சிசிடிவி காட்சி அடிப்படையில், இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

Night
Day