டேங்கர் லாரி, கார் மீது மோதி விபத்து - ஒருவர் பலி - 2 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சேத்துப்பட்டு சிக்னல் அருகே டேங்கர் லாரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். பட்டாளம் பகுதியை சேர்ந்த சீனிவாசன், அவரது தம்பி விஜய், நண்பர் கிஷோர் ஆகியோர் வானகரம் மீன் சந்தைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது சேத்துப்பட்டு சிக்னல் ஈகா தியேட்டர் அருகே வந்த டேங்கர் லாரி ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர்  படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day