கார் ஓட்டுநர் எரித்துக் கொலை- திமுக கவுன்சிலர், மகன்கள் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திருமணம் கடந்த உறவால் கார் ஓட்டுநர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

காரமடை நகராட்சி திமுக 3 வார்டு கவுன்சிலர் ரவிகுமார் மகனின் மனைவியுடன் கார் ஓட்டுநர் அலாவுதீன் என்பவர், திருமணம் கடந்த உறவில் இருந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து கவுன்சிலர் ரவிகுமார் அவரது இரு மகன்கள் சேர்ந்து அலாவுதீனை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து எரித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் அலாவுதின் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையித்தில் புகாரளித்தனர். வழக்குப் பதிவு செய்து அலாவுதினை தேடி வந்தநிலையில் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அலாவுதீனின் தம்பி ஹாரீஸ் என்பவர், அண்ணன் அலாவுதீனின் மனைவியுடன் திருமணம் கடந்த உறவு வைத்துள்ளதாக சந்தேகித்து, சிறுமுகை சாலையில் உள்ள ஹக்கீம் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இந்த விவகாரத்தில் ஹாரீஸ் மற்றும் ஹக்கீமை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அலாவுதீன் காணாமல் போகாமல் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் போலீசாருக்கு வந்தது.   இதனிடையே ஹக்கீம் அளித்த தகவலின் பேரில் காரமடை நகராட்சியில் செல்போன் கடை நடத்தி வரும் திமுக கவுன்சிலர் மகனின் மனைவிக்கும், அலாவுதீனுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதனை கண்டித்ததால் கோவமடைந்த மனைவி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். 

இதைத் தொடர்ந்து, கவுன்சிலர் ரவிக்குமார் தனது மகன்கள் சரண்குமார், மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து அலாவுதீனை மேட்டுப்பாளையத்திற்கு வரவழைத்து அடித்து தாக்கி எரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகலின் பேரில் திமுக கவுன்சிலர் ரவிக்குமார், சரண்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Night
Day