சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கார்ணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர் கடந்த 2022ம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக பெங்களூருவுக்கு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றவாளி சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

Night
Day